அண்டை வீடு: பங்களாதேஷ்
அண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள், சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110.
பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார்.
இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் பின்னலாடைத் தொழில்நிறுவனங்கள் உட்பட பல தொழில்நிறுவனங்கள் மோசமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது, மிகவும் குறைந்த கூலியில் எந்தவிதமான உரிமைகளும் அற்று அந்தத் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலை செய்வது, விலைவாசி உயர்ந்திருப்பது,நிலநடுக்கத்துக்கு பலமுறை உள்ளாகியிருந்தாலும், தரமில்லாத அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது, லஞ்சம் வாங்குவது கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது என பல செய்திகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
எனினும் வங்கதேசத்தில் தோன்றிய கவி நஸ்ருல் இஸ்லாம் பற்றிய கட்டுரை, பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றிக் கூறும் லஜ்ஜா நாவல் பற்றிய தகவல்கள் விடுதலை யுத்தப் படங்களைப் பற்றிய தகவல்கள் படைப்பாளியான நூலாசிரியரின் பார்வையில் நன்கு வெளிப்பட்டிருக்கின்றன.
நன்றி:தினமணி, 22/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818