சாயத்திரை

சாயத்திரை, சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.218, விலை ரூ.200. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை மையப்படுத்தி இயங்கிவரும் சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கருப்பொருளாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் “சாயத்திரை’. ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி நஷ்டப்பட்ட சாமியப்பன், அவருடைய உதவியாளர் பக்தவச்சலம் – ஜோதிமணி, அந்நிறுவனத்தின் காவலாளி நாகன் மற்றும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு முதியவர் (செட்டியார்) ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு வட்டார வழக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை ஆகியவை தனித்தனியே விவரிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் […]

Read more

அண்டை வீடு: பங்களாதேஷ்

அண்டை வீடு: பங்களாதேஷ், பயண அனுபவங்கள்,  சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.105, விலை ரூ.110. பின்னலாடை உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளில் திருப்பூருக்குப் போட்டியாக வங்காளதேசம் முன்னணியில் நிற்கிறது. எனவே வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 12 பேர் கொண்ட குழு திருப்பூரிலிருந்து சென்றது. அக்குழுவில் நூலாசிரியரும் இடம் பெற்றிருக்கிறார்.வங்காளதேசம் சென்று அங்குள்ள நிலைமைகளை மிகத் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். இந்நூலை அங்கே அதைப் பார்த்தேன்… இங்கே இதைப் பார்த்தேன் என்று விவரிக்கும் வழக்கமான பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகக் கருத முடியாது. வங்காள தேசத்தின் […]

Read more

நெசவு

நெசவு, சுப்ரபாரதிமணியன், சிற்பி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. மனிதர்களின் மானத்தைக் காக்கும் துணியை நெய்திடும் நெசவாளர்கள், தங்கள் தன்மானத்தைத் தக்கவைத்துக் கொள்ள நடத்திடும் போராட்டமான வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கதைகள், சில கட்டுரைகள். நெய்யும் ஆடையின் தரம் நாளுக்குநாள் உயர்வதும், நெய்பவன் வாழ்வாதாரம் தாழ்வதும் அருமையாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. நன்றி: குமுதம், 25/10/2017.

Read more

அழியும் மரங்கள்

அழியும் மரங்கள், சுப்ரபாரதிமணியன், சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நம் நாட்டில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறி உள்ளது. அவ்வாறு அழிந்து வரும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை இந்த நூல் செய்துவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   தேவதைகளால் தேடப்படுபவன், படி வெளியீடு, விலை 60ரூ. புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம். தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த கவிஞராக வருவார் என்பதற்கு முன்னோட்டமாக விளங்குகிறது இந்த நூல். […]

Read more

கோமணம்

கோமணம், சுப்ரபாரதிமணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ. முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில், பக்தர்கள் அனுபவித்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளுடன் பேசும் நாவல் இது. கடவுள் நம்பிக்கை, சடங்குகள், பழங்கதைகள், நாத்திகம் என்று எல்லாமே அலசப்பட்டுள்ளன. பொதுமக்களின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளை அலசி, சமூகம் சார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர். நன்றி: குமுதம், 5/4/2017.

Read more

நைரா

நைரா, சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 190, விலை ரூ.150. வர்த்தகத்துக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் தமிழ் மண்ணுக்குப் புலம் பெயர்ந்து வந்த நைஜீரிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாவல் நைரா. உலகமயமாக்கலின் தாக்கத்திலும், அந்நிய தேச கலாசார பன்முகத்திலும் சிக்கித் தவிக்கும் நைஜீரிய இளைஞன்தான் கதையின் நாயகன். கண்டங்கள் தாண்டி வந்த மக்களும் கடை விரித்து காசு பார்க்கும் தொழில் நகரமான திருப்பூரின் பின்னணியில் விரிகிறது இந்நாவல். பண்பாட்டிலும், உருவ அமைப்பிலும், மொழியிலும் வேறுபட்ட ஒரு சமூக மக்கள், மாற்று தேசத்தில் […]

Read more

அன்பே உலகம்

அன்பே உலகம், சுப்ரபாரதிமணியன், நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை, பக். 48, விலை 50ரூ. சிறுவர்களின் வாழ்க்கை நெறியை கற்றுத்தருவதோடு, சிறுவர்களின் பேச்சு வழக்கிற்கேற்ப இக்கதைகள் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/5/2016.     —-   தொல்காப்பிய கலைச்சொல் விளக்கம், முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 383, விலை 200ரூ. தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைச்சொற்களைத் தொகுத்து அகரநிரல் அமைத்து, எவரும் தாமே கற்கும்படியான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கும் நூல் இது. 2500 ஆண்டுகளுக்கு […]

Read more

பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள் (நாவல்), சுப்ரபாரதிமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 248, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024698.html பனியன் கம்பெனிக்குப் போற பசங்க, எங்க கபடம் இல்லாம இருக்காங்க… என்று கேட்கிறாள் ஒரு தாய். படிக்கப் போக வேண்டிய வயதில் பணிக்குச் சென்று அல்லல்படும், டீன்-ஏஜ் பையன்களைப் பற்றிச் சொல்லும் நாவல் இது. பள்ளி நாட்களின் நினைவுகளோடும், விடுமுறைக்கால கனவுகளோடும் உலாவும் பிஞ்சுகளின் மனதையும், உடலையும், பல தனியார் தொழில் நிறுவனங்கள் காவு […]

Read more

கர்ம வீரர் காமராசரின் வரலாறு

கர்ம வீரர் காமராசரின் வரலாறு, முகிலை எம். மதுசூதனப் பெருமாள், மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html கவிதை வடிவில் காமராஜர் வரலாறு. கல்விக்கண் திறந்த காமராசரின் வாழ்க்கை வரலாற்றை எளிய, ஆனால் இனிய கவிதை நடையில் ஆசிரியர் ஆக்கித் தந்துள்ளார். படிப்போர் உள்ளத்தை தொட்டு உணர்வை தட்டி எழுப்பும் கருத்துக்கள் நூல் முழுவதும் நிறைந்துள்ளன. நூலின் இறுதியில் பிரிவுத்துயர் என்னும் பாடல் தலைப்பிட்டு பத்துக்கும் மேற்பட்ட […]

Read more