அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், விலை 140ரூ. மகாகவி பாரதியாரை அருந்தவப்பன்றி என்ற அடைமொழியுடன் அழைக்கும் இந்தப் புத்தகத்தின் தலைப்பு, சிலருக்கு வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சொல், தன்னைப் பற்றி பாரதியாரே கூறிய சொல் என்பதை இந்த நூல் மூலம் அறியும் போது வியப்பாக இருக்கிறது. பாரதியார் சில காலம் கவிதைகள் ஏதும் எழுதாமல் மிகுந்த துயரத்தில் வாழ்ந்து வந்தார். அவருடன் இருந்த கவிதை தேவி அவரை விட்டுப் பிரிந்ததாகவும், சில ஆண்டுகள் கழித்து கவிதை தேவி தன்னை அடைந்த […]

Read more

அருந்தவப்பன்றி

அருந்தவப்பன்றி, சுப்பிரமணிய பாரதி – பாரதி கிருஷ்ணகுமார், சப்னா புக் ஹவுஸ், பக்.174, விலை ரூ.140. நூலின் தலைப்பு  ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். என்றாலும் நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், நூலாசிரியர் சொல்லும் விஷயங்களில் அமிழ்ந்து பாரதியாரைப் பற்றி நம் மனதில் ஏற்கெனவே இருந்த சிறப்பான மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக வலுப்பெற்றுவிடுகின்றன. இப்படி ஒரு மகாகவியா?என்று யோசிக்க வைத்துவிடுகிறது. தமிழ்க் கவிதையை மக்கள் மொழியில் மாற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. அவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கவிஞராகவே நம் எல்லாருடைய மனதிலும் நிற்கிறார். ஆனால் பாரதியார் […]

Read more

மாயமனிதன்

மாயமனிதன், எச்.ஜி.வெல்ஸ், தமிழில் புவியரசு, சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நவீன அறிவியலுடன், கற்பனையையும் சேர்த்து எழுதப்படும் கதைகள் எப்போதும் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படி ஐரோப்பிய இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘இன்விசிபிள் மேன்’ என்ற நாவல், தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டு உள்ளது. நாவலை படிக்கும்போதே அதன் காட்சிகள் மனதில் இழையோடுகின்றன. விறுவிறுப்பும், திகிலும் கூட்டும் இந்த நாவல் படிப்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள், சுதா மூர்த்தி, தமிழில் உமா மோகன், சப்னா புக் ஹவுஸ், பக். 204, விலை 130ரூ. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றிய தொகுப்பு இந்தப் புத்தகம். நூலாசிரியர் சுதாமூர்த்தி இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர். நூலாசிரியரின் உதவியால் இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவி பெற்று பொறியியல் படித்த தபால்காரரின் மகன், பின்னாளில் உயர்ந்த நிலைக்கு வருகிறார். தனது தோழியின் மகளைப் பெண் பார்க்க வந்த அந்த இளைஞனின் குடும்பம். எதேச்சையாக சுதா மூர்த்தியை அந்த வீட்டில் […]

Read more

பொழுதுக்கால் மின்னல்

பொழுதுக்கால் மின்னல், கா.சு. வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், விலை 180ரூ. எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் எழுதிய நாவல். கோவை மண்ணின் மணம் கமழுகிறது. மானுட வாழ்வின் இருப்புக்கும், இலக்குக்கும் இடையே நிகழும் ஓயாத யுத்தத்துக்கும் மத்தியில் உறவுகளின் அர்த்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. நன்றி: தினத்தந்தி,19/7/2017.

Read more

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம், கா.சு.வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், பக்.206, விலை ரூ.140. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தோன்றி வரும் ஆறுதான் நொய்யல் ஆறு. நீலியாறு, கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி ஆகியவைதான் நொய்யல் ஆறாக மாறுகின்றன. இன்று காய்ந்து கிடக்கும் இந்த ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவரே நேரடியாக வெள்ளநீரில் இறங்கி நடந்து மக்களைச் சந்தித்திருக்கிறார். இப்போது நொய்யல் ஆற்றின் பல பகுதிகள் […]

Read more

யோக முத்திரைகளின் அறிவியல்

யோக முத்திரைகளின் அறிவியல், தமிழில் வி.மகாலிங்கம், சப்னா புக் ஹவுஸ், விலை 185ரூ. முத்திரைகளின் வரலாறு, பொதுவான செய்முறை, பஞ்சபூதக் கொள்கை போன்றவை தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 200 முத்திரைகள் விரிவாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. முத்திரைகளைச் செய்வதன் மூலம் உடல், மன சமநிலையையும் நோயற்ற வாழ்வையும் எவ்வாறு பெற முடியும் என்பதை இந்நூல் அறிவியல் பூர்வமாக விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

அழியும் மரங்கள்

அழியும் மரங்கள், சுப்ரபாரதிமணியன், சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நம் நாட்டில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறி உள்ளது. அவ்வாறு அழிந்து வரும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை இந்த நூல் செய்துவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   தேவதைகளால் தேடப்படுபவன், படி வெளியீடு, விலை 60ரூ. புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம். தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த கவிஞராக வருவார் என்பதற்கு முன்னோட்டமாக விளங்குகிறது இந்த நூல். […]

Read more

கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் […]

Read more