அன்றாட அறிவியல் தகவல்கள்

அன்றாட அறிவியல் தகவல்கள், ஆத்மா கே.ரவி, சூர்யா பதிப்பகம், பக்.280, விலை ரூ.175.

விசிறி இல்லாமல் விமானம் பறப்பது எப்படி? பாட்டரிகளில் அ, அஅ, அஅஅ என்பது எதைக் குறிக்கிறது? கிரெடிட் கார்டுக்கும், ஸ்மார்ட் கார்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? மெட்டல் டிடெக்டர் எப்படி துப்பாக்கி போன்றவற்றை இனம் கண்டுபிடித்து அறிவிக்கிறது? டெர்ரா கோட்டா என்றால் என்ன? கார்பன் – 14 டேடிங் என்றால் என்ன? மணல் கண்ணாடியாவது எப்படி? விமானத்தின் உடல் பகுதி எதனால் கட்டப்படுகிறது? எக்ஸ்ரே முதுகுக்குப் பின்னால் இருந்து எடுக்கப்படுவது ஏன்? கேடிஎம் என்பது என்ன? யுரேனியம் எப்படி ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் பயன்படுகிறது? மியூசிக் தெரபி விளக்கம் என்ன? கஇஈ என்றால் என்ன? அலோபதி மருத்துவத்துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்பவர் யார்? கடலிலிருந்து மின்சாரம் எடுப்பது எப்படி?

கறுப்பு துவாரம் என்பது என்ன? பிங் பாங்க் என்றால் என்ன? ஐ.என்.எஸ்.தல்வார் போர்க் கப்பலின் சிறப்பு என்ன? இவை போன்ற 224 கேள்விகளுக்கு இந்நூல் விளக்கமளிக்கிறது. பொருத்தமான படங்கள் உள்ளன. மாணவர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பயன்படும் சுவையான தகவல்கள் அடங்கிய நூல்.

நன்றி: தினமணி, 12/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *