அண்ணன்மார் சுவாமி கதை
அண்ணன்மார் சுவாமி கதை, கவிஞர் சக்திக்கனல், நர்மதா பதிப்பகம், விலை 290ரூ.
கொங்கு நாட்டு வேளாளர் காவியமான பொன்னர் – சங்கர் வரலாறு, “அண்ணன்மார் சுவாமி கதை” என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாடோடி இலக்கியம். பொன்னர், சங்கர், தங்கம் ஆகிய மூவரும் வரத்தால் பிறந்தவர்கள். தாயார் தாமரை, தான் பட்ட இன்னல்களை எல்லாம் மக்களிடம் சொல்கிறார். தான் செய்த சபதங்களையும் சொல்கிறாள். அண்ணன்மார் இருவரும், பங்காளிகளை பழிவாங்கி, அன்னையின் சபதத்தை நிறைவேற்றுகிறார்கள்.
பெற்றோர் மறைவுக்குப்பின், பொன்னர், சங்கர் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் தாயார் செய்த சபதத்தை நிறைவேற்ற மணப்பெண்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்.. இப்படி செல்கிறது கதை. கவிதையையும், உரைநடையையும் கலந்து கதையை சுவைபட எழுதியுள்ளார் கவிஞர் சக்திக்கனல்.
நன்றி: தினத்தந்தி, 11/10/2017.