அன்பின் உரு அருளின் தரு வள்ளலார்
அன்பின் உரு அருளின் தரு வள்ளலார், பேராசிரியர் புதுவைக்கிருஷ்ணா, அருள்மொழிப் பிரசுரம், விலைரூ.250.
வள்ளலாரின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் நுால். வாசிப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டியங்காரன் நாடகத்தை நடத்திச் செல்லும் பாங்கு அருமை. வள்ளலார் ஜோதியில் கலந்தது வரை வரிசையாகத் தெரிவிக்கிறது.
உலகில் 51- ஆண்டுகள் வாழ்ந்த மகானின் வரலாற்றை, 51- காட்சிகளில், 51- பாத்திரங்களோடு மிக நேர்த்தியான காட்சிகளாக அமைந்துள்ளன. முதல் அங்கத்தில் சிதம்பரத்தில் ரகசியக் காட்சி கண்டு அருள் பெற்றதும், வள்ளலாரின் முதல் சொற்பொழிவும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
சன்மார்க்க சங்கம் நிறுவியதன் நோக்கம், கடவுளை அன்பால் ஒளி வடிவில் வழிபட வேண்டும்; எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பின்பற்ற வேண்டும் போன்ற உயர் நெறிகளைக் குறிப்பிடுகிறது. வள்ளலாரின் வரலாற்றை அறிய துணை செய்யும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்.
நன்றி: தினமலர், 12/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818