தமிழ் நாட்டுப்புறவியல்
தமிழ் நாட்டுப்புறவியல், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.250.
நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பை ஆய்வு நோக்கில் வழங்கும் நுால்.
தேவராட்டத்தை நடத்துவோர், நடத்தப்படும் ஊர்கள், ஆட்ட முறை என்று ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துகிறது. தேவராட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் உருமி மேளத்தைத் தேவதுந்துபி என்று மாற்றுப்பெயர் கொண்டு குறிப்பிடுவதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டுப்புறவியலை மானுடவியல் சிந்தனையுடன் இணைத்து உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கிறது. நாட்டுப்புறவியலில் புதிய அணுகுமுறையாக உள்ளது. உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை, தமிழ் வாசகர்களுக்கு எளிய நடையில் மொழிபெயர்த்து தந்துள்ளார். நாட்டுப்புறவியலில் பிரிக்கப்படாமல் ஒன்றியிருக்கும் சாதியக் கட்டுமானத்தை தெரிவித்துள்ளார்.
வாய்மொழிக் கதைகளின் ஆதிக்கம், எழுத்துமொழிக் கதை வரவால் எந்தப் பாதிப்பும் அடையவில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
– முகிலை ராசபாண்டியன்.
நன்றி: தினமலர், 22/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194932154_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818