அன்பின் உரு அருளின் தரு வள்ளலார்

அன்பின் உரு அருளின் தரு வள்ளலார், பேராசிரியர் புதுவைக்கிருஷ்ணா, அருள்மொழிப் பிரசுரம், விலைரூ.250. வள்ளலாரின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் நுால். வாசிப்போரை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டியங்காரன் நாடகத்தை நடத்திச் செல்லும் பாங்கு அருமை. வள்ளலார் ஜோதியில் கலந்தது வரை வரிசையாகத் தெரிவிக்கிறது. உலகில் 51- ஆண்டுகள் வாழ்ந்த மகானின் வரலாற்றை, 51- காட்சிகளில், 51- பாத்திரங்களோடு மிக நேர்த்தியான காட்சிகளாக அமைந்துள்ளன. முதல் அங்கத்தில் சிதம்பரத்தில் ரகசியக் காட்சி கண்டு அருள் பெற்றதும், வள்ளலாரின் முதல் சொற்பொழிவும் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது. சன்மார்க்க சங்கம் நிறுவியதன் […]

Read more

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள்

அம்பேத்கரின் அரிய கருத்துரைகள், அருள்மொழிப் பிரசுரம், விலை 60ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை டாக்டர் அம்பேத்கர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். அவருடைய அரிய கருத்துக்களை தொகுத்துள்ளார் அச்சுதமங்கலம் சச்சிதானந்தம். சாதிப்பாகுபாடு, கல்வி, பொருளாதாரம், நாடு, மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த 282 கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/7/2016.

Read more