அறிவியல் பயணம் 2016
அறிவியல் பயணம் 2016, பேரா.கே. ராஜு, மதுரை திருமாறன் வெளியீட்டகம், விலை 120ரூ.
அறிவியல் பார்வையுடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்கிற ஆவலில் விளைந்த 50 அறிவியல் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு.
மாறிவரும் மனித வாழக்கைக்கேற்ப அறிவியலின் அற்புதங்களை எவ்விதம் நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய கட்டுரைகள் இவை.
‘செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…?’, ‘சிம்பன்ஸிகளுக்கு சமைக்கத் தெரியுமா?’ ‘தண்ணீர் பிடிக்க ஏடிஎம் மிஷின்’, ‘சிறுநீரிலிருந்து மின்சாரம்’ என ஒவ்வொரு கட்டுரையும் நம்மை தலைப்பிலேயே கவனிக்க வைக்கின்றன.
நன்றி: தி இந்து, 24/6/2017.