பொன்னியின் செல்வன் ஓவியங்கள்
பொன்னியின் செல்வன் ஓவியங்கள், ஓவியர் சங்கர் லீ, வெளியீடு, மு.ஆ. சங்கரலிங்கம், விலை 450ரூ.
‘பொன்னியின் செல்வன்’ நாவலே ஓர் எழுத்துச் சித்திரம்தான். வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார், நந்தினி, பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி என அக்கதை மாந்தர்கள் அனைவருக்கும் வாசகர்களும் தங்கள் மனதில் உருவம் கொடுத்திருப்பார்கள். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ கதாமாந்தர்களை ஓவியங்களாகப் படைத்துள்ளார் ஓவியர் சங்கர் லீ.
அந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டினால், நந்தினியையும், வந்தியத்தேவனையும் அலங்காரமாக உருவாக்கினால் எப்படி இருக்கும். அந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் ஓவியர் சங்கர் லீ -யின் பொன்னியின் செல்வன் ஓவியங்கள் புத்தகத்தை வாங்கி வண்ணம் தீட்டி மகிழலாம்.
நன்றி: தி இந்து, 24/6/2017.