அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை
அறிவியலில் பெண்கள் ஒரு சமூக வரலாற்றுப் பார்வை, கு.வி. கிருஷ்ணமூர்த்தி, அடையாளம் பதிப்பகம், பக். 340, விலை 280ரூ.
மனித இனத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என அனைத்துக்கும் பெண்கள் தங்களின் பங்களிப்பை திறம்பட அளித்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. அதை இந்நூல் விளக்குகிறது.
மருத்துவத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கி, வேதியியல், உளவியல், புவியியல், கணினிஇயல், உயிரியல், கணிதவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண் அறிவியலாளர்களின் பங்கு குறித்த வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளது.
பிற நாட்டவர் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த மரபணு அறிஞரான இ.கே.ஜானகி அம்மாள், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். நேருவின் அழைப்பின் பேரில் இந்தியா திருப்பிய அவர், இந்தியாவின் தாவரக் கள ஆய்வு நிறுவனத்தை மறுசீரமைப்புச் செய்யும் பணியை மேற்கொண்டார் என்பன உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்கள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளன.
அறிவியல் ஆய்வுகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லாதது, திருமணம் செய்து குடும்பப் பொறுப்புகளினால் ஏற்படும் அழுத்தம், பணியிடங்களில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகள், தங்களுக்கான பெண் முன்மாதிரிகள் இல்லாதது என்று ஆண்களைப் போன்று அதிக அளவில் பெண்கள் ஈடுபட இயலாததற்கான காரணங்களையும் இந்த நூல் அலசுகிறது.
அறிவியலோ, கண்டுபிடிப்புகளோ பாலினத்தைச் சார்ந்தவை அல்ல, திறமையைச் சார்ந்தவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல் மிகவும் பயனுள்ளது.
நன்றி: தினமணி, 21/11/2016.