ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம், (பாகம் 7), பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், வசந்தா பிரசுரம், பக்கம் 296, விலை 220ரூ.
ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்று ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இந்நூல் ஆசிரியர், தினமணி கதிரில் 2004 முதல் 2017 வரை வாசகர்கள் தங்கள் நோய்களுக்கான மருத்துவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல்.
இதற்கு முன் இந்நூலின் ஆறு பாகங்கள் இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு வெளியாகிய நிலையில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஏழாவது பாகம் வெளியாகியுள்ளது. வாதம், பித்தம், கபம் என்ற மூன்று வகை தோஷங்கள் தான் மனித உடலை கட்டுக்குள் வைக்கின்றன. இதற்கு நாம் உட்கொள்ளும் உணவிலும், செயல்படும் விதத்திலும் தவறுகள் நேர்ந்தால் தோஷங்கள் சீற்றமடைந்து நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
இந்த சீற்றத்தை ஆயுர்வேத மருந்துகள் சமையலறை பொருட்கள், மூலிகைப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை பெறும் வழிமுறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில் இந்நூல் பசி, பசியின்மை, அஜீரணம், உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகக் கோளாறு, தலைவலி, மூட்டு வலி, வயிற்று புண், வாயுவின் சீற்றம், வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, நீரழிவு நோய், தோல் உபாதைகள், உடல் பருமன், குடற்புழுக்கள் இப்படி பல்வேறு நோய்களுக்கான… 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, அந்தந்த நோய்கள் உருவாகும் காரணங்களை விளக்கி அவற்றுக்கான மருத்துவக் குறிப்புகளையும், அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் பதிலாக எளிய தமிழ் நடையில் விளக்கிக் கூறியுள்ளது சிறப்பானது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக்,6/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026783.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818