வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும்
வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும், மேகலா சித்ரவேல், மணிவாசகர் பதிப்பகம், விலை 125 ரூ.
உலக தத்துவங்களை ஈரடி குறளில் எடுத்துரைக்கும் திருக்குறள் எனும் உன்னத படைப்பை நமக்கு அளித்த திருவள்ளுவர், பொய்யில் புலவர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழி புலவர் என பல்வேறு பெயர்களில் போற்றப்படுகிறார்.
அதே போன்று மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், வள்ளல், மனிதநேய பண்பாளர், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல பட்டப் பெயர்களைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பொக்கிஷங்களான இவர்கள் இருவரையும் இணைத்து ஒரு புதிய கோணத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. அதாவது திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் இருந்து 127 குறட்பாக்களை எடுத்து அவற்றோடு எம்ஜிஆரையும் அவரின் குணநலன்களையும் ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர்,
இந்தப் புத்தகத்தை படிப்பதன் மூலம் 127 குறள்கள், அதற்குரிய பொருள் மற்றும் விளக்கத்தை அறிந்து கொள்வதோடு எம் ஜி ஆர் பற்றிய ருசிகர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: தினத்தந்தி 23/5/ 2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026747.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818