பாரதி முதல் கவிதாசன் வரை
பாரதி முதல் கவிதாசன் வரை, பூ.மு.அன்புசிவா, குமரன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ.
பாரதி முதல் கவிதாசன் வரை எனும் இந்நுால் தொடர்ச்சியான வரலாறாக இன்றி, காலப்போக்கில் அவ்வப்போது எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
இந்நுாலின் முதல் கட்டுரை பாரதியைப் பற்றியது. அடுத்தடுத்த மூன்று கட்டுரை, சங்க இலக்கியம் பற்றியது.
பின், கம்பன், திருவள்ளுவர் என அமைந்து, இக்காலத்தில் சக்திஜோதி, பா.விஜய், கனிமொழி, நா.முத்துக்குமார், அகிலா, கவிதாசன் ஆகிய படைப்பாளிகளின் கவிதைகளையும் திறனாய்வு செய்துள்ளது இந்நுால்.
பாரதியின் சமுதாய உணர்வையும், உலகளாவிய ஆன்மிகப் பண்பையும் தக்க சான்றுகளோடு முன்வைக்கிறது இந்நுால்.
திருவள்ளுவர், கம்பர் போன்ற தமிழின் ஆளுமைகளை ஹோமர் போன்ற மேற்கத்திய ஆளுமைகளோடு ஒப்பீடு செய்துள்ளது. நவீன காலத்தமிழ்க் கவிதைகளின் போக்குகளை இனம் கண்டு, அவற்றின் தனித்தன்மைகளும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன.
பழைய இலக்கியங்களைப் பற்றி அறியவும், நவீன இலக்கியங்களது போக்கினை உணரவும் இந்நுால் உதவும்.
–இரா.பன்னிருகைவடிவேலன்
நன்றி: தினமலர், 26/8/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027182.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818