பாரதி உள்ளம்

பாரதி உள்ளம்,  வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், பக். 144, விலை ரூ.135.

தமிழின் மகாகவியான பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளானாலும் அவரது படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவரது கவித்துவம் நிரம்பிய தூய உள்ளம்.

அவருடைய உள்ளத்தில் அன்பு, கடவுள் பக்தி, நகைச்சுவை உணர்வு, தாய்ப்பாசம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியிருந்தன. அவற்றைப் பற்றி எழுதியுள்ளார் முதுபெரும் பாரதி அன்பரான வி.ச. வாசுதேவன்.

பாரதியாரைப் பற்றிய பல்வேறு தகவல்கள், அவரது குரு பரம்பரை, அவரது பழக்க வழக்கங்கள், நண்பர்கள் என்று பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல். இது தவிர மகாத்மா காந்தியுடன் அவருக்கு இருந்த பக்தி, வள்ளலார், கோதை, திருவள்ளுவர், ஒüவையார், ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் படைப்புகளோடு பாரதியின் படைப்புகளை ஒப்பிட்டு பார்க்கும் கட்டுரைகள், இளம் வயதிலேயே பாரதிக்கு இருந்த எழுத்து ஆர்வம், ஆகியவற்றைப் பற்றியும் நூலாசிரியர் சுவைபட எழுதியுள்ளார்.

விவரம் தெரியாத வயதிலேயே தாயை இழந்த பாரதிக்கு இருந்த தாய்ப்பாசமே தாய்த்திருநாட்டைப் பற்றி பாட வைத்தது, வடநாட்டு பிராமணர்களைப் பார்த்து பாரதி முறுக்கு மீசை வைத்துக் கொண்டது போன்ற அரிய தகவல்கள் இந்த நூலில் காணப்படுகின்றன.

இந்த நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பாரதி அன்பர்களுக்கு எக்காலத்திலும் உற்சாகமளிக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி, 22/10/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *