பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு
பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு, எஸ்.ஜி.சூர்யா, தடம் பதிப்பகம், விலைரூ.300
குறிப்பிட்ட கட்சி தேர்தல் செயல்பாட்டில் மேற்கொண்ட உத்தி சார்ந்து விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் தேர்தல் உத்தி சார்ந்து ஒப்பீட்டு வாய்ப்பை வழங்குகிறது.
ஓட்டுக்கு நோட்டு கொடுக்காமல், இலவசங்கள் பற்றி அறிவிக்காமல் சாதித்துள்ள வெற்றி என குறிப்பிட்டுள்ளார். இலக்கை நிர்ணயித்து, களத்தில் பணியாற்றி, ஒருங்கிணைத்து, எதிர்க் கட்சிகளை பின்தள்ளிய கதை விவரிக்கப்பட்டுள்ளது.
அரசியல் எதிரியான காங்கிரஸ், சித்தாந்த எதிரியான கம்யூனிஸ்ட் கட்சிகளை, வட கிழக்கில் விரட்டியடித்த நுட்பம் சொல்லப்பட்டுள்ளது. அசாமில் பயன்படுத்திய ராஜதந்திரம் பற்றியும் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. வடகிழக்கில் கற்றதை, பயன்படுத்தி பா.ஜ., வெற்றிக்கான உத்தி வகுக்க உதவும் நுால்.
நன்றி: தினமலர், 10/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194878803_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818