என் இதயமே நீ நலமா?
என் இதயமே நீ நலமா?, டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 80ரூ.
இதயம், மனிதனை இயங்கச் செய்கின்ற தொழிற்சாலை. இத்தகைய சிறப்பு பெற்ற இதயம் எவ்வாறு இயங்குகின்றது? இதயத்தில் வருகின்ற நோய் நிலைகள், அதைத் தடுக்கும் வழிமுறைகள், எத்தகைய உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்? என்பன போன்ற கருத்துகளை நவீன விஞ்ஞான மருத்துவப் பார்வையிலும், அன்றைய சித்தர்கள் காட்டிய வழியிலும் இந்த நூலில் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா அழகிய முறையில் விளக்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 6/12/2017.