என் உடல் என் மூலதனம்

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், பக். 120, விலை 90ரூ.

தன் உடலைக் குறித்த புரிதல், வணிக மருத்துவத்தை நிராகரித்தல், இயற்கையைச் சார்ந்திருத்தல், உணவு பற்றிய எளிய ரகசியங்கள் ஆகியனவற்றை இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார் நூலாசிரியர். இயற்கைக்கு எதிரான பயணத்தில் ஒரு முறிப்பை ஏற்படுத்துகிறது இந்நூல்.

வெளியேறாமல் தேங்கிய கழிவுகளை நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ உடல் காய்ச்சலை உருவாக்கி மொத்தமாக ஓர் எரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காய்ச்சல் என்பது உடல் கொண்டாடும் போகிப்பண்டிகை. இறைச்சி அத்தனை கடினமான உணவல்ல.

கடும் வெப்பத்தில் மிகை மசாலாக்களுடன் தயாரிக்கும்போது தான் எதிர் உணவாக மாறுகிறது எனக் கூறி, இயற்கை உணவு வகைகளைப் பட்டியலிடுகிறது இந்நூல். மருத்துவம், ஈவு இரக்கமற்ற சுரண்டலாகி விட்ட நிலையில், மனித அறங்கள் வேகவேகமாக தொலைந்து கொண்டிருக்கிற கதியில், இந்நூல் போன்ற படைப்புகள் இன்னும் வேண்டும்.

-புலவர் சு. மதியழகன்.

நன்றி: தினமலர், 29/5/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *