என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும்
என் வாழ்வில் சந்தித்ததும் சாதித்ததும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப. சங்கர், பாவை பிரிண்ட்ர்ஸ், விலை 460ரூ.
தெய்வ பக்தியுடன், ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, ஒழுக்கத்தோடும் நற்குணங்களோடும் வளர்ந்து பல பெரியோர்களின் ஆசியாலும், ஆதரவாலும் கல்வி பயின்று, அரசின் மிக உயர்ந்த பதவிகளில் நேர்மையும், மனிதநேயமும் சிறக்கப் பணியாற்றி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.சங்கரன்.
இவருடைய வாழ்க்கை வரலாறே இந்த நூல். குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைய முடியும் என்பதை நிரூபித்து காட்டியதுடன், சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவை. அவற்றையும் இளைய சமுதாயத்தினரும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக விரிவாக நூலாசிரியர் எடுத்துக் கூறி உள்ளார். மனிதனின் கடமை அன்பு, பண்பு, பாசம், கட்டுப்பாடு ஆகியவையே தர்மம் சார்ந்த வாழ்வாகும்.
இதனையே அனைத்து மதங்களும் மனிதர்களின் மனங்களில் உபதேசங்கள் வாயிலாக விதைத்து உள்ளன. மனித நேயம் வளர்வதற்கு உதவும் இதுபோன்ற உயரிய சிந்தனைகள் இந்த நூல் முழுவதும் காணப்படுகிறது. நற்பண்புகளையும், உயரிய சிந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த நூல் வலியுறுத்துகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818