காவிரியின் செல்வன்
காவிரியின் செல்வன், தேசிக மணிவண்ணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ.
புகழ் பெற்ற சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில், தேசிக மணிவண்ணன் படைத்துள்ள காவிரியின் செல்வன் என்ற சரித்திர நாவலின் கதாநாயகன், சோழ மன்னர்களில் ஒருவரான கோச் செங்கட்சோழன் ஆவார்.
கி.பி. 101 முதல் கி.பி. 200 வரை நடைபெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட இந்த நாவலில், அப்போது வாழ்ந்த மன்னர் பரம்பரையுடன் சில கற்பனை கதாபாத்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நாவல் முழுவதும் காதல், வீரம், போர் என்று சரித்திர நாவலுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் சுவைபட தரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து கீழ்த்திசை நாடுகளுக்கும் நகர்ந்து செல்லும் இந்த நாவலில், எதிர்பாராத திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் ஏராளமாகக் காணப்படுவதால், நாவலை ஆர்வத்துடன் படிக்க முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818