எந்தையும் தாயும்
எந்தையும் தாயும், நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, விலை: ரூ.230
ஒடிஷாவில் பிறந்தவரும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமான நரசய்யாவுக்குத் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கடற்படைக் கப்பல், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர், கம்போடியா புணர் நிர்மாணத்தில் பங்குபெற்றது, வங்கதேச விடுதலைப் போரில் பங்காற்றியது என இவருடைய பணி வாழ்க்கையைப் போல எழுத்து வாழ்க்கையும் விரிவானது.
‘எந்தையும் தாயும்’ என்று இவருடைய புதிய நூலில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை விவரிக்கிறார் நரசய்யா. தன்னுடைய அனுபவங்களும், அவருடைய தாய் தந்தையரின் அன்றாட அனுபவங்களை அவர்கள் கதையாகச் சொன்ன விஷயங்களுமாக நிறைந்திருக்கிறது இந்நூல். இவை போக, புத்தகங்கள் வழியாகக் கற்றுணர்ந்தவற்றையும் கால வரிசைப்படி காந்தி காலமான காலகட்டம் வரை தொகுத்தளிக்கிறார்.
‘புதுகைத் தென்றல்’ இதழில் ஐம்பது மாதங்கள் தொடராக வந்த கட்டுரைகள் இப்போது புத்தகம் வடிவம் பெற்றிருக்கின்றன. வரலாற்றை அறிந்துகொள்வதன் வழியாகவே செய்த தவறையே மீண்டும் இழைக்கும் அவலத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் மீள முடியும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் அதிகம் தெரிந்திடாத அரிதான தகவல்களும் உண்டு.
நன்றி: தமிழ் இந்து, 8/5/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031348_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818