ஹைட்ரோ கார்பன் அபாயம்
ஹைட்ரோ கார்பன் அபாயம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், விலை 225ரூ.
தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது.
வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ. ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல் பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல்.
நன்றி: தி இந்து, 6/1/2018.