ஹிதோபதேசத்தில் நிர்வாகம்

ஹிதோபதேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க், பக்.160, விலை ரூ.100.  16/2,

ஹிதோபதேசக் கதைகளுக்கு என்றுமே முதுமையில்லை. குழந்தைகளுக்கான புத்தகம் என்ற நிலையில் உள்ள அதனை நூலாசிரியர் நிர்வாகக் களத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். மூலத்தில் உள்ளபடியே கதைகளைத் தருவதென்றால் வர்ணனை, உரையாடலுக்கு அதிகப் பக்கங்களாகும்.

நீதிகள், நியதிகள், சுலோகங்கள் கதைகளை விட நீளமானவை. எனவே கதைகளைச் சுருக்கி தாத்பர்யங்களை விரிவாகவும் நிர்வாகவியலோடு சம்பந்தப்படுத்தியும் இந்தப் படைப்பை நூலாசிரியர் தந்துள்ளார்.

49 கதைச் சுருக்கங்கள் கொண்ட இந்த நூலில், துணிவில் இருக்கிறது வெற்றி; பொய் பேசுவதைவிட மெளனம் மேலானது, தீங்கு செய்யும் திறமைசாலி ஆபத்தானவன், ஒரு கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது ஆபத்து. வென்றால் குழுவினர் பங்கு போட்டுக் கொள்வார். தோற்றால் தலைவரே பொறுப்பாவார், தகுதியை எடை போடாது, சலுகைகள் தரக் கூடாது என 146 நிர்வாக நெறிகள் இடம் பெற்றுள்ளன.

ஹிதோபதேசம் கதைகளில் வரும் பிராணிகள் வெவ்வேறு வகை மனிதர்களின் உருவகங்களாகும். இதனைப் புரிந்து கொள்ளும் லட்சிய நிர்வாகி எப்படி நடந்து கொள்வார் என எழுதப்பட்டுள்ள கடைசி அத்தியாயம் நூலின் முத்தாய்ப்பு. நிர்வாகவியல் மாணவர்கள், இளம் நிர்வாகிகள் படித்துப் பயன் பெற வேண்டிய படைப்பு.

நன்றி: தினமணி, 18/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *