இதயம் மறப்பதில்லை
இதயம் மறப்பதில்லை, ஜீவன், மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ.
விஞ்ஞான காதல் கதை
கார் விபத்தில் இறந்துவிடும் கதாநாயகன் விஞ்ஞான அதிசயத்தால் சில ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெறுகிறான். அதற்குள் அவனுடைய காதலிக்குத் திருமணம் நடந்துவிடுகிறது. இதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை வைத்து, கதையை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஜீவன்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜீவன் இக்கதையை ஆங்கிலத்தில் எழுத, அதை அசல் தமிழ்க் கதைபோல் மொழிபெயர்த்துள்ளார் ஏ. கிருஷ்ணமூர்த்தி.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.