இலக்கியத்தில் மேலாண்மை
இலக்கியத்தில் மேலாண்மை, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 1300ரூ.
எந்த ஒரு தொரீல் என்றாலும், ஏன் விவசாயம் என்றாலும் அதில் மேலாண்மை இருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய உலகில் அழுத்தம் திருத்தமாக கூறப்படும் உண்மையாகும்.
மேலாண்மை பண்புகளை எல்லோரிடமும் வளர்ப்பதற்கு 105 தலைப்புகளில், ஒரு வழிகாட்டும் நூலாக திகழும் இந்த நூலை, சிறந்த இலக்கியவாதியும், சிறந்த பேச்சாளரும் மற்றும் அரசு பணியின் நிர்வாகி என பன்முகத் தன்மையை தன்னகத்தை கொண்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வே. இறைவன்பு எழுதிய “இலக்கியத்தில் மேலாண்மை” என்ற இந்த நூல் படிக்க, படிக்க திகட்டாத இனிமையான ஒரு நூல்.
“ராணி” வார இதழில் தொடர் கட்டுரையாக எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. ‘மேலாண்மை என்பது நவீன யுகத்தில் அடிக்கடி கூறப்படும் வார்த்தை என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு’ என்பதை, இந்த நூலில் முதல் வரியிலேயே, ‘மனித இனம் தொடங்கியபோதே, மேலாண்மையும் துளிர்க்க ஆரம்பித்தது’ என்று எழுதிய நூலாசிரியர்,
ஒவ்வொரு கட்டத்திலும் மேலாண்மை எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதற்கு தக்க சான்றுகளையும், வண்ணப்படங்கள் வாயிலாக இந்த நூலில் விளக்கி உள்ளார். நிச்சயமாக இந்த நூலை படிக்கும் ஒவ்வொருவருக்கும் பலன் அளிக்கும். எந்த நிலையிலும் வாழக்கையின் உச்சத்திற்கு சென்றே தீரவேண்டும் என்ற வேட்கையில் இருப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.