இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், தேநீர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.180.

தமிழின் முக்கிய இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் தான் நடத்திய “இலக்கிய வட்டம்’ இதழில் 1963 – 65 காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கியத்தைப் படைப்பது, வாசிப்பது, விமர்சிப்பது என்ற அடிப்படையில் விரியும் க.நா.சு.வின் இலக்கியப் பார்வையை விளக்குவதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.

இலக்கியப் படைப்பு என்பது தனிமனித சிருஷ்டி. படைப்பாளியின் உள்ளத்தில் திரண்டு எழுகிற ஓர் உணர்ச்சியின் உந்துதலில் ஏற்படுவது என்பது நூலாசிரியரின் கருத்து. வாசிப்பவனின் ரசனை, வாசிப்பனுபவம் ஆகியவைதான் இலக்கிய வாசிப்பின் மையம்.

வாசிப்பவனின் ரசனை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். படிப்பதற்கான பயிற்சியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்பது அவருடைய கருத்து.

அதேபோன்று தனிமனித ரசனை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இலக்கிய விமர்சனம் இருக்க வேண்டும். இலக்கியத்தின் அழகியல்கூறுகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதற்கு உதவுவதாக விமர்சனம் இருக்க வேண்டும். மேலும் “இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட விஷயகனம் எப்படி இலக்கியத்தில் வருகிறது; வந்து உருப்பெறுகிறது என்று காண வேண்டியது இலக்கிய விமர்சனத்தின் நோக்கம்’ என்கிறார் க.நா.சு. ஏற்கெனவே உள்ள பல “இஸங்களின்’ கண்ணோட்டத்தில் இலக்கியத்தைப் பார்ப்பது அவருக்கு உடன்பாடானதல்ல.

பெரிய பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள், நாவல்கள் இலக்கியமாகாது. அவை வாசகர்களின் ரசனைக்குத் தீனி போடுபவை. ஒரு படைப்பின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றைத் தனியே பிரித்துப் பார்க்கக் கூடாது. இவ்வாறான, க.நா.சு.வின் இலக்கியக் கண்ணோட்டத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

நன்றி: தினமணி 15/11/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *