இனியெல்லாம் பிஸினஸே!

இனியெல்லாம் பிஸினஸே!, எஸ்.பி. அண்ணாமலை, ஒய்யே பப்ளிகேஷன்ஸ், விலை 500ரூ.

தொழில் துறையில் கோலோச்சும் முதல் தலைமுறை தொழில் முனைவோர், வியாபாரக் குடும்பத்தில் இருந்து புதிதாகச் சிந்தித்து தனிப்பாதை கண்டவர்கள் என 52 பேருடைய வெற்றிக்கதைகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளனர்.

கோவை உண்ணாமுத்து, மதுரை கமலக்கண்ணன், ஆஸ்திரேலியா செந்தில் உள்பட 52 நகரத்தார்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். இதை எஸ்.பி. அண்ணாமலை தொகுத்து வழங்கியுள்ளார்.

முதலீட்டைப் புரட்டும் முறை, பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு, வங்கிக் கடன்களைக் கையாளுவது என்று தொழிலில் இறங்கும் அனைவருக்கும் பயன்படும் வகையில் தங்களின் கருத்துகளை தொழிலில் வெற்றி கண்டவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் இந்நூல்.

நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Leave a Reply

Your email address will not be published.