இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?
இப்படியெல்லாமா இருக்கிறது பிரச்னை?, ப. திருமலை, புதிய வாழ்வியல் பதிப்பகம், விலை 60ரூ.
திருட்டு, கொலை, கொள்ளை என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் திருத்துவதற்காக ஏற்பட்ட, சிறைச்சாலைக்குள்ளேயே குற்றங்கள் நிகழ்வதன் காரணம் என்ன என்று ஆராய்கிறது ஒரு கட்டுரை.
‘தங்கள் பிரச்னையை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கிற வேகமும் கவலையும் கைதிகளிடம் இருக்கிறது. அதை யாரிடமும் கொட்ட வழியில்லாதபோது மனதுக்குள்ளேயே புழுங்கி ஆத்திரமாக வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த ஒவ்வொரு சிறைச் சாலையிலும் கவுன்ஸிலிங் அவசியம்’ என்கிறார் ஆசிரியர்.
காணாமல் போகும் பெண் குழந்தைகள் கருவறையா, கல்லறையா? சொல்லப்போனால் ஏற்படும் ஆபத்து போன்ற அவசியமான ஒன்பது தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள சிந்தனையைத் தூண்டுகிற அருமையான கட்டுரைகளின் தொகுப்பு.
நன்றி: கல்கி, 3/12/2017.