இறையுரையிசை
இறையுரையிசை (பகவத் கீதை), ஹரிஹரன், சோலைப் பதிப்பகம், விலைரூ.100.
ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது.
அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான்.
அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, ஆசிரியரைப் பார்க்கலாகாது என்றார். அவ்விளக்கத்தில் சொன்ன தத்துவங்கள், யோகநிலைகள் போன்றவையே எளிய வெண்பாக்களால் புனையப்பட்டுள்ளன. வாழ்க்கைக்குரிய தத்துவ சாரத்தை வழங்கியுள்ளமை சிறப்புடையது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்.
நன்றி: தினமலர், 26/12/221.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818