இசை மேதைகள்
இசை மேதைகள், கே. ஆர். கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு சந்திரா சங்கர், விலை 75ரூ.
அந்தக் காலத்து இசை மேதைகள் முதல் இந்த காலத்து இசைக்கலைஞர்கள் வரை, அவர்களது வாழ்க்கை வரலாற்றை சுவைபடக் கூறும் நூல்.
சங்கீதப் பிதாமகர் என்று அழைக்கப்படும் புரந்தர தாசர் (கி.பி. 1494 – 1564), தான் சென் (1506 – 1589) ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தான் சென்னின் இயற்பெயர் ராம்தனு. இவர் அக்பரின் மகளான மெஹருன்னிசைவை மணந்தார். அக்பரின் சபையில், ‘தீபக்’ என்ற ராகத்தைப் பாடி, விளக்குகளை எரியச் செய்தவர் என்று கூறப்படுகிறது. இசை ஆர்வம் கொண்டவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.