இதழியல் இலக்கியம் ஆகுமா
இதழியல் இலக்கியம் ஆகுமா?, இளசை எஸ்.எஸ்.கணேசன், யுனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், விலை 75ரூ.
வாழ்க்கையில் ஒன்றிணைந்த பத்திரிகைகள் தோன்றிய வரலாறு மட்டுமல்லாமல் வளர்ந்த விதம், சந்தித்த பிரச்சினைகள், தற்போதைய நிலையை புள்ளி விவரத்தோடு ஆசிரியர் தந்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் பத்திரிகைகள் ஆற்றிய பணிகளையும், சுதந்திரத்திற்கு பிறகு உருவான பிராந்திய மொழி பத்திரிகைகள் பற்றியும் விவரித்த விதம் சிறப்பு. உலகமய அரசியலில் ஊடகங்கள் என்ற தலைப்பில் உலக, இந்திய அரசியலில் ஊடகங்கள் செய்த மாற்றங்களும் நாட்டின் முதல் பத்திரிகையாளர் ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்ட புகழ்பெற்ற பத்திரிகையாளர்களின் விவரங்களும் விரிவாக தரப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818