ஜே.சி.டேனியல் திரையில் கரைந்த கனவு
ஜே.சி.டேனியல் திரையில் கரைந்த கனவு, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், சென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம், விலைரூ.100.
மலையாள திரைப்படத்தின் தந்தை என போற்றப்படும், ஜே.சி.டேனியலின் சினிமா சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்தைக் கூறும் நுால். மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்துள்ளார் செ.புஷ்பராஜ். எளிய நடையில் இயல்பாக வாசிக்கும் வகையில் உள்ளது.
மலையாளத்தில், விகதகுமாரன் என்ற படம், 1928ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. இதை தயாரித்து இயக்கி, நடித்தவர் தமிழர் ஜே.சி.டேனியல். இந்த அங்கீகாரம் அவருக்கு நீண்ட நாட்களாக வழங்கப்படவில்லை.
அவருக்கான அங்கீகாரத்தை போராடி பெற்று தந்தவர் பத்திரிகையாளர் செல்லங்காட்டு கோபாலகிருஷ்ணன். அவர் திரட்டிய தகவல்களின் தொகுப்பே இந்த நுால். பரபரப்பான திருப்பங்களுடன், மர்ம நாவல் வாசிப்பது போல் சுவாரசியமாக உள்ளது.
டேனியல் பட்ட சிரமங்களை, வேதனையை உரிய வலியுடன் பதிவு செய்துள்ளது. சினிமா உலகில் முக்கிய வரலாற்று ஆவணம். தமிழில் வந்துள்ள அரிய நுால்.
– அமுதன்
நன்றி: தினமலர், 10/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9c%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818