காக்க காக்க உடல் நலம் காக்க
காக்க காக்க உடல் நலம் காக்க, டாக்டர் பெ.போத்தி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ.
கால்நடை மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற இந்நூலாசிரிர், மனிதனைத் தாக்கும் நோய்கள், அதற்கான காரணங்கள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.
அவற்றுள் ‘மனிதனைத் தொற்றும் விலங்கின நோய்கள், உடல்நலம் காக்க உன்னத வழிகள், நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்’ போன்ற நூல்கள் வாசகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றதன் அடிப்படையில் இந்நூலையும் இயற்றியுள்ளார்.
பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள், பிறவியிலேயே உருவாகும் மரபுசார்ந்த நோய்கள், கெட்டுப்போன மற்றும் உட்ல்சாராத உணவுகளை உண்பதால் ஏற்படும் அலர்ஜி நோய்கள் இப்படி பல வழிகள் மூலம் ஆயிரக்கணக்கான நோய்கள் மனித உடலைப் பாதிக்கின்றன. அவற்றில் சில நோய்களை மட்டும் தேர்ந்தெடுத்து இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர். கறிப்பாக ஒரு நோய் உருவாகக் காரணமான நுண்கிருமி எது? அது எந்த வகையில் உடலுக்குள் பாய்கிறது? அதற்கான காரணம் என்ன? அது உட்புகுந்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்ன? அதனால் ஏற்படும் நோய் என்ன? அதைக் கண்டுபிடிப்பது எப்படி? அதற்கான சிகிச்சை என்ன? இப்படி விபரமாக ஒவ்வொரு நோயைப் பற்றியும், அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விவரிக்கிறார்.
அந்த வகையில் பெருங்குடலைப் பாதிக்கும் நோய்கள், நிமோனியா காய்ச்சல், வயிற்றுப்புண், காக்காய் வலிப்பு, ஒற்றைத் தலைவலி, வாதநோய்கள், இருதய நோய்கள், மூட்டு வலிகள், காது கேளாமை, இரத்த நாளப் புடைப்பு போன்ற பல நோய்கள் இந்நூலில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மருந்தின்றி பொதுவாக உடல்நலத்தை பாதுகாக்கும் ஒன்பது வகையான எளிய முறைகளையும் இந்நூலில் ஆசிரியர் கூறியுள்ளது பயன்தரத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 29/8/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027146.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818