ஒரு வீடு ஒரு தேவதை
ஒரு வீடு ஒரு தேவதை, கவுசிக் பாபு, கவுதமா வெளியீட்டகம், விலை 275ரூ.
1950-ம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ் நாட்டின் கடைகோடி கிராமத்தில் வசிக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை மிக இயல்பாக இயம்புகிறது இந்நாவல். கதையின் நாயகன் எளிமையான குடும்பத்தில் பிறந்து பல இடர்களை கடந்து, கல்வி கற்று அரசு பள்ளியின் ஆசிரியராக உயர்கிறான். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்க மனப்பான்மை, பிடிவாதம், அதிகார திமிர் போன்றதாக மாறும் கதாநாயகனின் குணாதிசயங்கள் குடும்பத்தை தவிக்க வைக்கிறது.
கதாநாயகனை கரம் பிடித்து வந்தவளும் கதையின் நாயகியுமான அந்த பெண் இவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்கிறாள், கணவனால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை சமாளித்து எப்படி குடும்பத்தை வழிநடத்துகிறாள் என்பதாக கதை நீளுகிறது.
தன் கணவனை பழைய மனிதனாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள், கணவனோடு, பெற்றெடுத்த பிள்ளைகளையும் அன்போடு அரவணைத்து வழி நடத்துவது போன்ற கதாநாயகியின் பண்புகள் பெண்மையின் மேன்மையையும், மென்மையையும் உரக்க பேசுகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818