ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை
ஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 125ரூ.
இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நலிந்து கிடந்த இந்து மதத்தைக் காப்பாற்றிய ஆதிசங்கரரின் 33 ஆண்டுகால வரலாறு விவரமாகத் தரப்பட்டுள்ளது. அவரது பிறந்த ஆண்டு எது என்ற முரணான கருத்துக்கள் பற்றியும், அவர் காஞ்சியில் தான் முக்தி அடைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்தும் தரப்பட்டுள்ளன.
அத்துடன் தற்போது வரை உள்ள மடாதிபதிகளின் முழு விவரமும், காஞ்சி மடத்தின் கிளைகள் எங்கே இருக்கின்றன என்ற தகவலும் இதில் காணக்கிடைக்கின்றன.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818