காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம், காஞ்சி பாலச்சந்திரன், பானு பாலா பதிப்பகம், விலைரூ.250.
இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதைகள் அமைந்துள்ளன. கேசவன், கமலா, மஞ்சரி என்னும் கதாபாத்திரங்கள், காலங்களில் அவள் வசந்தம் என்னும் நாவலின் உயிரோட்டமாக அமைந்துள்ளன.
இரண்டாம் நாவலான, ‘பூர்ணிமா’வில் பெண்ணின் வாழ்க்கை கதையும், ஏன் சிறைக்கு சென்றாள் என்பதையும் எடுத்துரைக்கிறது.
– வி.விஷ்வா
நன்றி: தினமலர்.24/10/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818