பாடி, ஆடு பாப்பா
பாடி, ஆடு பாப்பா, கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலை 400ரூ.
குழந்தைகள் முதல், சிறுவர்கள் வரை பாடி மகிழ ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். பாலர் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைப்பாடல்கள், மாணவர் பாடல்கள், தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள், தமிழ்மலர் பாடல்கள், பாடி ஆடு பாப்பா, தங்கக் கலசம், பாடலும் ஆடலும், பாச்செண்டு ஆகிய தலைப்புகளின் கீழ் சந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.
மிக எளிமையாக, இசையுடன் பாடத்தக்க வகையில் சொற்களைக் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. மழலையருக்கு, மொழி கற்பிக்கும் வகையில் அமைந்துள்ள சந்தப்பாடல்களும் உள்ளன. சிறுவர்கள் பாடி மகிழ ஏற்ற வகை பாடல்களும் உள்ளன.
மாணவ – மாணவியர் பாடி சிறக்க ஏற்ற வகையில் எளிய சந்தத்தில் அமைந்த பாடல்களும் உள்ளன. குழந்தைகள் உள்ள வீடுகளில் இருக்க வேண்டிய நுால்.
– மலர்
நன்றி: தினமலர்.24/10/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818