கடல் முற்றம்
கடல் முற்றம், அருள் சினேகம், கடல்வெளி, விலை 80ரூ.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், உள்ளிட்ட வேணாட்டுக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் முக்குவர்கள் பேசும் வழக்கு மொழியில் எழுதப்பட்ட 9 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் இந்நூலுக்கு எழுதியுள்ள 18 பக்க சற்றே பெரிய முன்னுரை. கதைமாந்தர்களின் வாழ்க்கையோட்டங்களை புரிந்துகொள்ள நமக்கு வழித்துணையாக உள்ளது.
ஊம சேசய்யன், பாதர் டாமி, கஞ்சிக் கலயம் உள்ளிட்ட கதைகள் தனித்த கவனிப்பை கோருகின்றன. வழக்கு மொழியிலேயே நகரும் கதையை வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள பின்னிணைப்பில் வட்டார வழக்குச் சொற்களுக்கான பொருளைத் தந்திருப்பதும் நல்ல அம்சம்
நன்றி: தி இந்து, 7/10/2017