கடவுளின் நாற்காலி

கடவுளின் நாற்காலி, அதியமான் கார்த்திக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.200, விலை ரூ.220.

 

இயற்கையுடன் முரண்பட்டு பூமிப் பந்தின் வளங்களை சுய லாபத்துக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, வேற்று கிரகங்களையும் ஆளத்துடிக்கும் பெருங்கோ பாண்டியன் என்பவரைத் தடுத்து நிறுத்தி, பாரம்பரியத்தையும் இயற்கை வளங்களையும் கேசவன் என்பவர் காப்பாற்றுகிறார். தமிழகத்தின் குக்கிராமத்தில் தொடங்கி நாகாலாந்து வழியே தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம் வரை பயணிக்கிறது “கடவுளின் நாற்காலி’.

வருடந்தோறும் சைபீரியாவிலிருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்துக்கு வலசை வரும் ஆமூர் பால்கன் பறவைகளை அங்குள்ள நாகா பழங்குடிகள், கிராமவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் உணவுக்காகவும் வேட்டையாடுகின்றனர். இதைத் தடுக்க நினைக்கும் கேசவன், துன்புறுத்தலுக்கு ஆளாகி, நாகாலாந்தை விட்டு வெளியேற பழங்குடிகளால் கெடு விதிக்கப்படுகிறார். ஆனால் அதிருஷ்டவசமாக அங்குள்ள சிலரால் காப்பாற்றப்படுகிறார்.

தங்களின் பாரம்பரிய விவசாய முறையைக் கைவிட்டு நாகா பழங்குடிகள் ஆமூர் பால்கன் பறவைகளை ஏன் வேட்டையாடுகின்றனர்? அதற்கு அவர்களை மறைமுகமாக நிர்பந்தப்படுத்தும் சூப்பர் – எக்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம் அடையும் லாபம் என்ன? என்பதெல்லாம் புனைவாக விவரிக்கப்பட்டிருந்தாலும் அதன் பின் இருக்கும் அறிவியலும், சுற்றுச்சூழல் குறித்த தகவல்களும் பிரமிக்கத்தக்கவை.

தென்னாப்பிரிக்காவிலுள்ள அகோயா மற்றும் கிகுயூ பழங்குடிகளின் பாரம்பரிய வாழ்க்கை முறை, நாகாலாந்துக்கு வலசை வரும் பால்கன் பறவைகள், சுற்றுச்சூழல், வேற்று கிரகங்கள், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ளதே இந்நாவலின் சிறப்பு.

நன்றி: தினமணி, 10/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *