கைக்குள்ளே கட்டுமானத் தொழில்

கைக்குள்ளே கட்டுமானத் தொழில்,அ.வீரப்பன், B&C  பதிப்பகம்,பக்.220. விலை ரூ.200.

சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வீடு கட்டுவதைப் பற்றிய அடிப்படையான பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டப்படும் வீடு தரமானதாக இருக்காது; அதிக செலவும் ஆகிவிடும். வீடு கட்டுவதைப் பற்றிய அடிப்படையான விஷயங்களை அது பற்றி எதுவும் தெரியாதவர்களுக்குச் சொல்லித் தருகிறது இந்நூல்.

ஒரு சிறந்த கட்டடக் கலைஞரிடம் கட்டடப் பொது வரைபடங்களை வாங்குவது, தகுதியும் அனுபவமும் உள்ள ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலையை ஒப்படைப்பது, தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது உட்பட பல ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன.

எந்தவிதமான மணலைப் பயன்படுத்த வேண்டும்? கட்டடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எந்தவிதமான மணல், சிமெண்ட், சுண்ணாம்பு கலவை வேண்டும்? கரையான் வராமல் தடுக்க அதற்கான மருந்து அடிப்பதை விட வேறு வழிகள் இருக்கின்றனவா? குளியலறை வழுக்காமல் இருக்க எப்படிப்பட்ட டைல்ûஸப் போட வேண்டும்? குளியலறையில் நீர்க்கசிவு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எம்சாண்ட் எனும் செயற்கை மணல் தரமற்றதா? சுவர்களில் விரிவு ஏற்படாமல் தடுக்க எவ்விதமான சிமெண்ட், மணல் கலவை வேண்டும்? எப்படி அதைச் சுவரில் தேய்க்க வேண்டும்? மாடிப்படிகளை அமைப்பது எப்படி? வீடு கட்டும் இடத்தில் அமைந்துள்ள மண்ணின் தன்மைக்கேற்ப கட்டுமானப் பணிகளை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்? வீட்டின் அடித்தளம், மேல்தளம் அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை? என கட்டுமானம் தொடர்பான பல கேள்விகளுக்குத் தெளிவாகவும், அறிவியல் அடிப்படையிலும் இந்நூல் விடையளிக்கிறது.

கட்டுமானச் செலவைக் குறைத்து, நீடித்து நிற்கும் உறுதியான வலிமையான கட்டடம் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல, கட்டுமானத் தொழில்சார்ந்த பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி,27/9/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027183.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *