கையளவு கடல்
கையளவு கடல், மதுக்கூர் ராமலிங்கம், பாரதி புத்தகாலயம், பக். 120, விலை 130ரூ.
எள்ளலும் துள்ளலும்
துள்ளல் நடையில் அமைந்த கட்டுரைத் தொகுப்பு இது. நாடறிந்த பேச்சாளர், பத்திரிகையாளரான மதுக்கூர் ராமலிங்கத்தின் சமூக அக்கறை எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படுகிறது.
கூடவே, எள்ளலும், நகைச்சுவையும் கைக்கொடுக்கிறது. ‘நார்ச் சத்து மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தேங்காய் நார் சாப்பிடச்சொல்லாதது ஒன்றுதான் பாக்கி’ என்று தனக்கு சர்க்கரை குறைபாடு வந்திருப்பதைக் கூட எளிதாகக் கடந்துசெல்ல முடிகிறது அவரால்!
-மானா பாஸ்கரன்,
நன்றி: தி இந்து, 3/2/2018.