காக்கியின் டைரி
காக்கியின் டைரி, சிங்கம்பட்டி பெ.மாடசாமி, நேசம் பதிப்பகம், விலை 200ரூ.
‘தேடுதலாக’ தேடிய தகவல்களின் தொகுப்பு நூல்.
அதில் விசித்திர வழக்கு, விநோத மனிதர், அரிய நிகழ்வு, அபூர்வ சம்பவம், வேடிக்கை,,, விநோதமென… – ‘இப்படியா? இருக்குமா? நடக்குமா? நடந்ததா?’ என்கிற கேள்விக்குறிகள் பல ஆச்சரியக்குறியாய் எழ, சிக்கின சிக்கல் வழக்குகள் சில.
அவைகளை அருமையாக பரபரப்பூட்டும் செய்தியாக பதிவு செய்திருக்கிறார் உதவி ஆணையராக ஓய்வு பெற்ற சிங்கம்பட்டி பெ. மாடசாமி. அன்றாடச் செய்திகளில், இப்படியெல்லாம் ஏமாற்றுவார்களா? இப்படியும் ஏமாறுவார்களா? மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சில குற்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இது போன்ற பல நிகழ்வுகளை மர்ம நாவல் வேகத்தில் தொகுத்துக் கொடுத்து, ‘நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால், எல்லாம் நலமாய் நடந்துவிடும்…’ என்பதை அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறார் பெ. மாடசாமி.
நன்றி: தினத்தந்தி, 10/8/2016.