கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை

கல்லூரி காணாதவர்களிடம் கற்க வேண்டியவை, சஞ்சீவியார் பதிப்பகம், விலை 110ரூ.

கல்லூரி படிப்பு முடித்தவர்களே சாதிக்க முடியும் என்பதல்ல. கல்லூரி காணாதவர்களும் நம் நாட்டில் சாதித்துள்ளனர்.

அந்த வகையில் கல்லுரிக்குச் செல்லாமல், தனது அனுபவப் படிப்பு காரணமாக சாதனை புரிந்த வள்ளலார், ஈ.வே.ரா. பெரியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜர், கிருபானந்த வாரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய 9 பேரை தேர்ந்தெடுத்து இந்த நூலில் என்ஜினீயர் க.அருச்சுனன் எழுதியுள்ளார்.

இந்த 9 பேர் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுவையாகவும், நமக்கு பாடம் புகட்டும் வகையிலும் அமைந்துள்ளதை அழகுற விளக்கியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *