கணித வரலாறு

கணித வரலாறு, பி. முத்துக்குமரன், எம். சாலமன் பெர்னாட்ஷா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 413, விலை 325ரூ.

எகிப்திய, மெசபடோமியக் கணிதம், கிரேக்கக் கணிதம், ரோமானியக் கணிதம், சீனக் கணிதம், இந்தியக் கணிதம் என தொன்மைக் காலம் தொடங்கி, இடைக்காலத்தில் தோன்றிய இஸ்லாமியக் கணிதம், ஐரோப்பியக் கணிதம் மற்றும் நவீன காலத்தில் மறுமலர்ச்சி கால இத்தாலிய தீபகற்பக் கணிதம், நவீன ஐரோப்பாவின் கணிதத்தின் துவக்கம் எனப் பல்வேறு தலைப்புகளில் கணித வரலாற்றை நூலின் ஆசிரியர்கள் விரிவாக எழுதியுள்ளனர்.

எண்களின் குணாதிசயங்களை எடுத்துரைக்கும் கணிதப் பிரிவுக்கு அரித்மெடிக் என்ற பெயர் வந்ததற்கு அரித்மோஸ் என்ற கிரேக்க வார்த்தைதான் காரணம் என்பதும் கணிதவியலாளர் பைத்தோகிராஸ் பள்ளி உறுப்பினர்கள் பைத்தகோரியன்கள் என்று அழைக்கப்பட்டதும் சுவாரஸ்யமான தகவல்களாகும்.

இசைக்கும் முழு எண்களுக்கும் இடையே நிலவிய தொடர்பைக் கண்டுபிடித்தவர்கள் பைத்தகோரியன்கள் என்றும் இந்த மாபெரும் கண்டுபிடிப்புதான் உலகச் செயல்பாடுகளுக்குள் கணித வடிவமைப்பு ஒன்று உட்பொதிந்திருக்க வாய்ப்புள்ளது என்பது முதன்முதலாகக் கோடிட்டுக் காட்டியதாகும் என்றும் நூலின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகத்தின் செயல்பாடுகளில் ஏதாவது ஓர் இடத்தில் கணிதம் பயன்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது என்பதை வரைபடங்கள், கணிதவியலாளர்களின் ஓவியப் படங்களுடன் வரலாற்று ரீதியாக நூல் ஆசிரியர்கள் விளக்கியுள்ளது சிறப்பாகும்.

நன்றி: தினமணி, 5/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *