கஞ்சி
கஞ்சி (சிறுகதை தொகுப்பு), ஞா.திரவியம், நர்மதா பதிப்பகம், பக்.264, விலை ரூ.225.
குமரி மாவட்ட மக்களின் அரை நூற்றாண்டுக்கு முந்தைய வட்டார வழக்கு, கலாசாரம், வழிபாடு, பண்பாடு, வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் 30 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முன்பொரு காலத்தில் கஞ்சி மிக முக்கிய உணவாக இருந்தது. தாங்கள் படிக்கும் சிதிலமடைந்த பள்ளியை மாணவர்களே புனரமைக்கின்றனர். மாணவர்களுக்கு அப்போது கஞ்சியை உணவாக வழங்கினர். நோன்பு கஞ்சி, பங்குனி உத்தரத் திருவிழாவின்போது பிரசாதமாக ஊற்றப்படும் கஞ்சி என கஞ்சி குறித்த பல்வேறு தகவல்களை “கஞ்சி’ சிறுகதை வெளிப்படுத்துகிறது.
மலைச்சரிவில் மரச் சீனிக்கிழங்கை விளைவித்து அநேகரின் வயிற்றுப் பசிக்கு வழிகாட்டிய பெருவட்டார் என்பவர் தனது முதுமைக் காலத்தில் ஆதரவின்றி இறந்துபோகிறார். அவரது சமாதி வழிபாட்டுத் தலமாக மாறுகிறது. அதில் கிடைத்த உண்டியல் காணிக்கையைப் பங்கு பிரிப்பதில் மோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் ஏற்படுகிறது. மனித மனங்களின் பேராசையை வெளிப்படுத்துவதாக “பெருவட்டார்’ சிறுகதை உள்ளது.
மூட நம்பிக்கை, இலங்கைத் தமிழ் அகதிகள் படும்பாடு, குடிப்பழக்கம், பல்வேறு சாதியினரின் பழக்கவழக்கங்கள், வறட்சி காரணமாக எலி நெல்லைத் தேடிச் செல்லும் விவசாயி பாம்பு கடித்து இறப்பது, பேச்சிப்பாறை அணை குறித்த வரலாற்றுச் செய்திகள், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தினர் குறித்த பல்வேறு தகவல்களை குமரி வட்டார வழக்கில் சிறுகதைகளாகப் பதிவு செய்திருப்பது இந்நூலின் சிறப்பு.
நன்றி: தினமணி 15/11/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818