கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும், ஜே. அருள்தாசன், மெல்சி ஜேசைய்யா பதிப்பகம், விலை 250ரூ.
முக்கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்ற ஊர் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்து மீனவர்கள், மீன் பிடிக்கும் கலையில் வல்லவர்கள்.
அந்த மாவட்டத்தின் கடலோர கிழக்கு எல்லையான ஆரோக்கியபுரம் முதல் மேற்கு எல்லையான நீரோடி கிராமம் வரையுள்ள 45 கிராமமக்களின் பேச்சு வழக்குச் சொற்களையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் அந்தந்த ஊர்களுக்கே சென்று ஆராய்ந்து ஓர் அழகிய ஆய்வு நூலை முனைவர் ஜே. அருள்தாசன் எழுதியுள்ளார்.
மேலும் 45 கிராமங்களின் பெயர் காரணங்களையும் ஆதாரங்களோடு வெளியிட்டிருக்கிறார். மீனவர்களின் பழக்க வழக்கங்கள், விளையாட்டுகள், பாடல்கள், பழமொழிகள், தொழில் நுட்பங்களைச் சொல்லித் தருகிறார். பாராட்டத்தக்க அரிய முயற்சி.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.