கருப்பர் கோவில் திருவிழா
கருப்பர் கோவில் திருவிழா, மனோ.இளங்கோ, எம்.ஜெ.பப்ளிகேசன் ஹவுஸ், விலைரூ.200.
தமிழகத்தில் சிலை கடத்தல் செய்திகளை படிக்கிறோம். இந்த காலத்தில் மட்டுமில்லை, பழங்காலங்களிலும் சிலை கடத்தல் நடந்துள்ளது. கோவில், அதை சார்ந்த சமூகம், சிலை கடத்தல், வழக்கு, தீர்ப்பு என, இந்த காலத்திற்கு ஏற்ற நாவல் இது.
‘சாமி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்… சாமி என் பக்கத்தில இருக்கணும் என்று தான் எடுக்கிறேன்… நான் ஒரு நாள் தான் சாமி சொத்த தின்னுறேன்…’
‘ராவணன், குபேரன் மீது, மதுரை சிறையில் கலவரம் செய்ததாக, போலீசார் பொய் வழக்கு போட்டிருக்கின்றனர்… கலவரத்திற்கு காரணம் ஜெயில் காவலரே தவிர இவர்கள் அல்ல…’
‘ஆடம்பரத்தை தவிர்த்தால், கால்வாசி முன்னேறலாம்; போலித்தனத்தை தவிர்த்தால், அரைவாசி; காழ்ப்புணர்ச்சி, ஜாதி, மத துவேசம் தவிர்த்தால், முக்கால்வாசி; சுயமரியாதையை வளர்த்தால் முழுவதும் முன்னேறலாம்…’ போன்ற உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
– டி.எஸ்.ராயன்.
நன்றி: தினமலர், 1.8.21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818