திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்
திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.344, விலை ரூ.375.
பண்டைய புத்தகங்கள், வரலாற்று மாந்தர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் திருக்குறள், அதன் ஆசிரியர் வள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு பிரத்தியேக சிறப்பும் சர்ச்சையும் உண்டு.
குறள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும், தங்களது உயர்வு நவிற்சியால், வள்ளுவனையும் குறளையும் தம்முடையதாக மட்டுமே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் காரணமாகிவிடுகிறது.
அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது.
திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களி
லிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது.
திருவள்ளுவர் கால நிர்ணயம் பற்றிய ஆராய்ச்சியில், பெரும்பாலான நேரங்களில், அறிவியல் பூர்வமாக சிந்திக்கவில்லை என்பது இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள தமிழறிஞர்களின் கருத்துகளிலிருந்து தெரிகிறது.
குறள் ஆராய்ச்சியும் அது தொடர்பான சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்றாலும், அது அறிவியல் அடிப்படையில் நடைபெற வேண்டும். அறிவுத் தேடலுக்கு எல்லையேது? ஆராய்ச்சிக்கு முடிவும், கரையும் ஏது?
நூலாசிரியர் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது என்றால் மிகையல்ல.
நன்றி: தினமணி, 23.8.21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609.
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818