கற்றது விசில் அளவு
கற்றது விசில் அளவு, டாக்டர் ஆர். பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 128, விலை 100ரூ.
இந்நுால், பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் மலர்ந்ததை சொல்லும் சுயசரிதை.
ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தன் குடும்பத்தினர் வறுமையில் வாடியதை உருக்கமாகச் குறிப்பிடுகிறார் பாண்டியராஜன். சைதாப்பேட்டையில், ஒரு எளிய குடும்பத்தில், பேருந்து ஓட்டுனரின் மகனாக பிறந்தவர், பாண்டியராஜன். சைதாப்பேட்டை, மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, அவர் என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
ஒரு ஆண்டு, என்.சி.சி., கேம்ப், சைதையில் அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே நடைபெற்றது. கேம்ப் கலை நிகழ்ச்சிக்காக, பாண்டியராஜன் தானே நாடகம் எழுதி, நடித்துக் காட்டினார்.
‘கடந்து வந்த பாதையை சொன்னால், நல்ல ஊக்க மருந்தாக இருக்கும் என்று மறக்க முடியாத விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன்’ என, பாண்டியராஜனின் சிறப்புகளை இந்த நுாலில் காணலாம்.
– எஸ்.குரு
நன்றி: தினமலர், 20/10/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027288.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818