கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள்
கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பு காவ்யா சு. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 900ரூ.
கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், சீறாப்புராண விரிவுரையாளர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர் கவி கா.மு. ஷெரீப். இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் முதல் முறையாக முழு அளவில் நூலாக வெளி வந்துள்ளது. இதில் தமிழரின் சமயநெறி, தமிழரசு கழகம் ஏன் வந்தது? சீறாப்புராண சொற்பொழிவுகள், வள்ளல் சீதக்காதி வரலாறு, பத்ர் போரின் பின் விளைவுகள் மாதம் இருமுறை வெளியான ‘ஒளி’ தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? பொதுச் சிவில் சட்டம் பொருந்துமா? போன்ற கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.பேராசிரியர் காவ்யா சு. சண்முக சுந்தரம் இவற்றை அழகிய முறையில் தொகுத்து வழங்கியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.
—–
பொன்னான நேரமும் புன்னகை வாழ்க்கையும், தேவி சந்திரா, மணிமேகலை பிரசுரம், விலை 75ரூ.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு நிமிட நேரமும் மிக முக்கியம் என்பதை சிறு சிறு சம்பவங்களை மையக் கருவாக கொண்டு சுவைபட எழுதியிருக்கிறார், நூலாசிரியர் தேசி சந்திரா. பல்வேறு தலைப்புகளில் மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் விதமாக விளக்கியிருப்பது புதுமை முயற்சி.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.